டிசம்பர் 19, சென்னை (Astrology Tips): தனுசு ராசியில் இருக்கும் மூலம் (Moolam) நட்சத்திரக்காரர்களே, கடந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு நன்மையான வெற்றிகரமான தொழில் ரீதியான முன்னேற்றமான ஆண்டாகவே இருந்து இருக்கும் . இந்த நன்மையான நிலை வரும் மாசி மாதம் வரை தொடரும். அதன்பின் எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
மூலம் நட்சத்திரகாரர் பலன்கள்:
வீட்டு வகையில் முன்னேற்றம் உண்டு, வீடு வாங்குவது, இடம் வாங்குவது, வாடகைக்கு குடியிருப்போர் புதிய வீட்டிற்கு இடம் மாறி, புதிய பெரிய வீட்டிற்கு செல்வது, வாகன யோகங்கள், மற்றும் தாய் வழி ஆதரவு, தாயினால் நன்மைகள், தாயின் நலன்கள் மேம்படுதல் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். அதே நேரத்தில் நீங்கள் தொழில் ரீதியாக எந்த புதிய முயற்சியும் தற்போது மேற்கொள்ளக் கூடாது. இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமாகும். புதிய தொழில் முயற்சி, வெளிநாடு செல்வது போன்ற எந்த புதிய முயற்சியிலும் இன்னும் ஓராண்டிற்கு ஈடுபட வேண்டாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் மார்ச் மாதத்திற்கு மேல் பெரிய அளவு முதலீடு செய்யக்கூடாது. இருக்கும் வியாபாரமும் சுமாரான அளவிலேயே லாபத்தை கொடுக்கும். தொழிலில் இடையூறுகள் ஏற்படலாம். புகழ் ,பெருமை கெடுவதற்கு தற்போது இருந்தே வாய்ப்பு இருக்கிறது. அதனால் எதிலும் கவனத்தோடும் முன்னெச்சரிக்கையோடும் நடந்து கொள்ளுங்கள். Astrology: 2025 ஆம் ஆண்டு கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
திருமண வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்வது என்றால் மாசி மாதத்திற்குள் திருமணத்தை முடிப்பது நல்லது. இல்லையென்றால் கண்டிப்பாக நீங்கள் பங்குனி மாதத்தில் இருந்து ஓர் ஆண்டிற்கு திருமணம் செய்யக்கூடாது. அதை மீறி செய்தால் வீண் பிரச்சனைகளும், கணவன் மனைவியிடையே பிரிவும் தான் ஏற்படும். சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எந்த கேள்வி பதிலையும் விடாமல் அனைத்து பாடங்களையும் நன்றாக படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல மதிப்பெண் பெற முடியும். பாஸ் பண்ணுவது பெரிய விஷயம் இல்லை. நல்ல மதிப்பெண் கடின உழைப்பால் தான் உங்களுக்கு கிடைக்கும்.
அரசு அதிகாரிகள் வேலையில் கவனத்துடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் கண்டிப்பாக பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழிலில் இடையூறுகள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் இணக்கமான சூழ்நிலை இருக்காது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாரான அளவிலேயே கிடைக்கும். மிகப் பெரிய அளவு வெற்றி கிடைக்கும் என்று கூற முடியாது. இழுபறியான சூழ்நிலையே இருக்கிறது. பெண்களுக்கு தாய் வழி ஆதரவு உண்டு வீட்டு வகையில் முன்னேற்றங்கள் உண்டு, வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. மாமனார் மாமியாரால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கருத்து வேறுபாடுகள், குழந்தைகளால் பிரச்சனை, குழந்தைகளின் ஆரோக்கிய குறைவு, அதனால் பிரச்சனை ஏற்படுவது போன்ற பலன்கள் நடைபெறும்.
புதிய கடன் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடனால் நெருக்கடி ஏற்படும். பணம் நெருக்கடி ஏற்படும். தொழிலில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபவர்கள் ஓரளவு லாபம் பார்க்கலாம். ஏஜென்சி, கமிஷன் அடிப்படையில் தொழில் செய்பவர்கள் நீண்ட இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு மன தைரியம் குறையும். இளைய சகோதரர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். போன் மற்றும் கடிதங்கள் மூலமாக உங்களுக்கு அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் இருப்பவர்கள், உங்கள் ஜாதகத்திலே திசை புத்திகள் நன்றாக இருந்தால், இந்த கோச்சார காலகட்டத்திலே அவை உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொலைதூர பிரயாணங்களை தவிர்க்கவும். வீண் அலைச்சலை தவிருங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள். உடல் நலம் பாதிக்கும்.
பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும். விநாயகர் வழிபாடு வினைகள் தீர்க்கும்.
மார்ச் மாதம் வரை உங்கள் மதிப்பெண் 70. மார்ச்சுக்கு பிறகு 40.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.