டிசம்பர் 19, சென்னை (Technology News): அஞ்சல் துறையில் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறூவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீடு (Accident Insurance) திட்டத்தில் குறைந்தபட்ச பிரீமியம் தொகையாக ரூ.399 மற்றும் ரூ.396 செலுத்தி சேரலாம். ஸ்மார்ட் போன் மூலமாக விரல் ரேகை பதிவிட்டு 5 நிமிடங்களில் இணையும் டிஜிட்டல் முறையினாலான இந்த பாலிசியில் விபத்துக் காப்பீடாக ரூ.10 லட்சம் பெறலாம். 18 முதல் 65 வயதுடையவர்கள் இந்த காப்பீட்டில் சேரலாம். Become Famous On Social Media: சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பது உங்களின் இலட்சியமா? ஆசையா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
விபத்தில் ஏற்படும் மருத்துவ காப்பீடு:
உள்நோயளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயளிக்கு அதிகபட்சம் ரூ.30 வரையும், விபத்தில் உயிரிழந்தாலோ, உறுப்பு செயலிழந்தாலோ அவர்களின் குழந்தைகளுக்கு (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்காக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மேலும் விபத்தில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தலா ரூ.1000 என 10 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். விபத்தில் உயிரிழந்தவரின் இறுதி சடங்குகளுக்கு ரூ.5000 வழங்கப்படும்.