டிசம்பர் 18, மாஸ்கோ (World News): புற்றுநோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் (Cancer Vaccine) உருவாக்கும் பணிகளில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவிலும் 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 6,35,000 புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன. Israel Hamas War: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்.. 45 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு..!
புற்றுநோய் தடுப்பூசி இலவசம்:
இந்நிலையில், புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த எம்ஆர்என்ஏ (mRNA Vaccines) தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (Radiology Medical Research Center) பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இது விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளாவிய மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.