IND Vs AUS | Ravichandran Ashwin with Virat Kohli at Dressing Room (Photo Credit: @dr_artisticsoul X)

டிசம்பர் 18, தி காபா (Circket News): இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர், வலது பக்க மட்டைப்பந்து ஆட்டக்காரர், பல விருதுகளை குவித்த நாயகன் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin). சர்வதேச, தேசிய அளவிலான பல கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவின் வெற்றிக்கு பல போட்டிகளில் உறுதுணையாக இருந்த அஸ்வின், மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நபர்களில் ஒருவர் ஆவார். Ravichandran Ashwin: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு; ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு.! 

பல விருதுகளுக்கு சொந்தக்காரர்:

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அஸ்வின், இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவரின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு அர்ஜுனா விருதும் வழங்கி கௌரவித்தது. பல போட்டிகளில் தொடர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார். விரைந்து பலநூறு விக்கெட்டுகளை காப்பாற்றி, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செயல்பட்டார்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு:

இந்திய கிரிக்கெட் அணியின் பல வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அஸ்வின், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இதனிடையே, அவர் சர்வதேச அளவிலான அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இதுதொடர்பான உரையாடல் விராட் கோலியுடன் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும்போது நடந்தததாக தெரியவருகிறது. அப்போது விராட் அஸ்வினை கட்டியணைத்து தனது ஆதரவை தெரிவித்தார். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய உடை மாற்றும் அறையில் ரவிச்சந்திரன் அஸ்வின் & விராட் கோலி தொடர்பான காணொளி: