Pushpa 2 Box Office Collection (Photo Credit: @iammoviebuff007 X)

டிசம்பர் 06, சென்னை (Cinema News): சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா: தி ரைஸ் (Pushpa The Rise). இந்த படத்தில் சந்தன மரக்கடத்தலையும், அதில் இருக்கும் தாதாக்களையும் கதைக்களமாக கொண்டிருந்தது. 2021ஆம் ஆண்டின் பெரிய ஹிட் படமாக இது மாறியது. இப்படத்தில் வித்தியாசமாக நடித்திருந்த அல்லு அர்ஜுனும், ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் வந்த ராஷ்மிகா மந்தனா ஆகியோரும், வேகமாக நகர்ந்த திரைக்கதையும் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. Pushpa 2 Stampede: அல்லு அர்ஜுனை பார்க்க அலைமோதிய கூட்டம்.. நெரிசலில் சிக்கி பெண் பலி..!

இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம், புஷ்பா 2: தி ரூல் (Pushpa 2 The Rule). இப்படம், நேற்று (டிசம்பர் 05) பான்-இந்திய அளவில் வெளியானது. முதல் பாகத்தில் சிறிது நேரமே வந்திருந்தாலும், பகத் பாசில் வில்லன் நடிகராக மிரட்டியிருந்தார். இரண்டாம் பாகத்தில், ஹீரோவுடன் கூடவே டிராவல் செய்யும் அளவிற்கு பெரிய வில்லன் கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான சண்டை காட்சிகள், ரசிக்க வைக்கும் காதல் காட்சிகள் என படத்திற்கு பலம் அதிகமாக இருப்பதால், படம் வெற்றி (Movie was Good) பெற்றிருக்கிறது.

வசூல் சாதனை:

புஷ்பா 2 படம், ப்ரீ-புக்கிங்கிலேயே இந்த ஆண்டில் அதிக வசூல் (Pushpa 2 Collection) பெற்ற படமாக உள்ளது. இதில் மட்டும் சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்ததாகவும், இந்திய அளவில் சுமார் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவை தாண்டி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகி இருக்கிறது. இதனால், உலகளவில் முதல் நாளிலேயே சுமார் ரூ.265 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் உலகளவில் ரூ. 282.91 கோடி வசூலித்துள்ளதாக வணிக நிபுணர் மனோபாலா விஜயபாலன் குறிப்பிட்டுள்ளார். புஷ்பா 2, இந்திய அளவில் சுமார் ரூ. 175 கோடி முதல் நாளில் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாகுபலி, கேஜிஎஃப் 2, கல்கி 2898 AD ஆகிய திரைப்படங்களின் முதல் நாள் வசூலை பின்னுக்கு தள்ளி புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது.

புஷ்பா திரைப்படத்தின் வசூல் தொடர்பான அறிவிப்பு:

 

View this post on Instagram

 

A post shared by PVR Cinemas (@pvrcinemas_official)