டிசம்பர் 24, மும்பை (Cinema News): நடிகர் சரத்குமார் (Sarathkumar), தன்னுடைய 150வது திரைப்படமாக, சியாம்-பிரவீன் இயக்கியுள்ள ‘தி ஸ்மைல் மேன்’ (The Smile Man)படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன், சுரேஷ் மேனன், குமார் நடராஜன் மற்றும் ஆழியா ஆகியோர் நடித்துள்ளனர். சலில் தாஸ், அனிஷ் ஹரிதாசன் மற்றும் ஆனந்தன் டி இப்படத்தை தயாரித்தனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் படத் தயாரிப்பாளர் விக்ரம் மோகன், இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ், எடிட்டர் சான் லோகேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்.. வீட்டிற்கு வந்த மனைவி, குழந்தைகள்..!
‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் ட்ரெய்லர்:
இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அவரது ஞாபகம் முழுமையாக அழிவதற்குள் அவர் தொடர் கொலைகள் செய்த ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உள்ளது. கிரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது ‘தி ஸ்மைல் மேன்-னின்’ ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகியுள்ளது.