டிசம்பர் 19, குற்றாலம் (Tenkasi News): வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக, கடந்த சில நாட்களாகவே தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதிகை நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் அதன் கிளை அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நீடித்த தடை:
கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்த கடுமையான மழை காரணமாக, அருவிகளில் ஆர்ப்பரித்து நீர் வெளியேறி காற்றாற்று வெள்ளம் ஓடியது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் மழை அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியின் வலுப்பெறும் தன்மை காரணமாக மழை குறைந்தது. Gold Silver Price: தங்கம், வெள்ளி வாங்க சரியான நேரம்.. விலை கிடுகிடு குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
பக்தர்கள் நீராட அனுமதி:
இதனால் குற்றாலம் மற்றும் அதன் கிளை அருவிகளான ஐந்தருவி, பழைய அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனினும், அசம்பாவிதங்களை தவிர்க்க கண்காணிப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திடீர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தால், உடனடியாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி:
தற்போது மார்கழி-கார்த்திகை மாதம் சபரிமலை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு முக்கிய திருத்தலங்களுக்கு மாலை அணிவித்து பயணம் செய்யும் பக்தர்கள், குற்றாலத்தில் வந்து நீராடி செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை, வெள்ளம் காரணமாக பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள காரணத்தால், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றாலம் மெயின் அருவியில் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மகிழ்ச்சியுடன் சுற்றுலாப் பயணிகள்:
Tamil Nadu: Due to heavy flooding at Courtallam Falls in Tenkasi district, a bathing ban for tourists was imposed. After 7 days, the ban was lifted, and tourists, including Lord Ayyappan devotees, have returned to bathe at the Main Falls pic.twitter.com/naSE0hnbem
— IANS (@ians_india) December 19, 2024