Lightning Strikes 6 Died: பள்ளிக்கு சென்றுவந்த மாணவிகள் முதல், விவசாய பணியாளர்களால் வரை.. மின்னல் தாக்கி ஒரேநாளில் 6 பேர் பலி..!
ஒரேநாளில் மின்னல் தாக்கி வெவ்வேறு இடங்களில் 6 பேர் பலியான சோகம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
மார்ச் 02, ஜெய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளிக்கிழமையான நேற்று, வெவ்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை காரணமாக ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் உயிரிழப்புகள்: மழை காலங்களில் ஏற்படும் மின்னலை விட, கோடைகாலத்தில் தொடக்கத்தில் ஏற்படும் திடீர் மழை மற்றும் இடி-மின்னல் தாக்குதல் சம்பவங்களால் இராஜஸ்தானில் ஆண்டாண்டுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் தொடருகின்றன. திடீரென வானிலையில் உண்டாகும் மாற்றத்தினால் இவை நடைபெறுகின்றன.
மாணவிகள், இளைஞர் பலி: வெள்ளிக்கிழமையான நேற்று இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா, ளால்செட் பகுதியில் 17 வயது பள்ளி மாணவி, 25 வயது இளைஞர் ஆகியோர் மின்னல் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல, தௌலத்புரா பகுதியில் பள்ளி நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற 16 வயது மாணவி பரிதாபமாக மின்னல் தாக்கி உயிரிழந்தார். Google Removing Indian Apps: சேவைக்கட்டண விவகாரத்தில் கறார் காண்பித்த கூகுள்; சாதி.காம், குக்கு எப்.எம் உட்பட பல செயலிகள் நீக்கம்.!
விவசாய தம்பதிக்கு நேர்ந்த சோகம்: சவாய் மாதேபூர் பகுதியில் விவசாய தம்பதிகளான ராஜேந்திரன் (வயது 30) மற்றும் அவரின் மனைவி ஜலேபி மீனா (வயது 28) ஆகியோர் வயல்வெளியில் வேலைசெய்துகொண்டு இருக்கும்போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதே மாவட்டத்தை சேர்ந்த தனலால் என்ற இளைஞரும் மின்னல் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். இவ்வாறாக நேற்று ஒரேநாளில் ராஜஸ்தானில் 6 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.
மின்னல் தாக்குதலின்போது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவும், மரங்களுக்கு அருகே அல்லது திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.