மார்ச் 02, புதுடெல்லி (New Delhi): கோடிக்கணக்கான செயலிகளை மக்களுக்கு பாதுகாப்பான முறையில் தரவிறக்கம் செய்ய உதவும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), சேவைக்கட்டணம் செலுத்தும் விவகாரத்தில் பல்வேறு செயலிகளை அதிரடியாக கூகுள் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. அதன்படி, தங்களின் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துகொண்டு, பயனர்களின் வாயிலாக பலனையும் அடைந்து தங்களுக்கான சேவைக்கட்டணத்தை செலுத்தாமல் இருந்த சாதி (Shaadi), மேட்ரிமோனி.காம், பாரத் மேட்ரிமோனி, பாலாஜி டெலிசிபிலிம்ஸின் ஆகிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. Delhi Pitbull Dog: 7 வயது சிறுமியை கடுமையாக தாக்கிய பிட்புல் நாய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!
ஒருதலைபட்சமாக நடக்கும் கூகுள்? அதேவேளையில், குக்கு எப்.எம் (KuKu FM), டேட்டிங் செயலி குவாக் குவாக், ட்ருளி மேட்லி (Truly Madly) ஆகிய செயலிகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விசயத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்து, கூகுள் ஒருதலைபட்சமாக நடக்கிறது எனவும் கூறி வருகின்றனர். கூகுளில் இருக்கும் செயலிகள் கூகுளுக்கு கட்டணம் வழங்குவது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதன் முடிவுகள் வருவதற்குள் இந்தியாவில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த மேற்கூறிய செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.