மார்ச் 05, சென்னை (Chennai): விஷ்ணுவின் 7வது அவதாரமான பகவான் ஸ்ரீ ராமர், அயோத்தியில் அவதரித்த நாள் ஸ்ரீ ராமநவமி தினமாக கொண்டாடப்படுகிறது. ஒட்டுமொத்த உலகில் உள்ள இந்து சமய வழிபட்டவர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீராமர், நல்லொழுக்கம், அமைதி, அனைத்து உயிர்களிடமும் அன்பு காண்பித்தால் என பல விஷயங்களை உலகத்தாருக்கு கற்பிக்க அவதாரம் எடுத்ததாக இந்து புராணங்கள் கூறுகின்றன. Rama Navami 2025: ஸ்ரீ ராம நவமி 2025; நாள், விரத முறை மற்றும் வாழ்த்துச் செய்தி இதோ..!
ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் (Sri Rama Navami Celebration 2025):
ஸ்ரீராம நவமி அன்று அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து, ஸ்ரீ ராமர் - சீதாதேவி, லட்சுமணன், அனுமார் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து, மஞ்சள்-குங்குமம் திலகமிட்டு வழிபடு செய்ய வேண்டும். துளசி இலைகள் கட்டியும் மாலை அணிவிக்கலாம். பழம், வெற்றிலை, பூ, சைவ உணவு சமைத்து படையலிட்டு வழிபடலாம். அன்றைய நாளில் விரதம் இருப்போர் மோர், பானகம், ஊறவைத்த பாசிப்பருப்பை படையலிட்டு வணங்கி பிரசாதமாக வழங்கலாம். ஸ்ரீராமரின் மந்திரத்தை எப்போதும் உச்சரிப்பது நல்லது. Ram Navami 2025: ராமநவமி 2025 எப்போது? வரலாறு என்ன? வாழ்த்துச் செய்தி, நல்லநேரம், விரத முறைகள் குறித்த விபரம் இதோ.!
ராமநவமி விரதம் பயன்கள் (Sri Rama Navami Fasting Methods & Benefits):
விரதம் இருந்து ஸ்ரீராமரை வழிபாடுபவருக்கு அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வர். வீட்டில் லட்சுமி அருள் கிடைக்கும். பகையாளிகளும் நண்பர்கள் ஆவார்கள். உடல் வியாதிகள் நீங்கும். வறுமை நீங்கி செல்வம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளும் சரியாகும்.
ஸ்ரீ ராமநவமி 2025 (Sri Rama Navami 2025):
2025ம் ஆண்டுக்கான ஸ்ரீராம நவமி ஏப்ரல் 05, இரவு 07:26 முதல் ஏப்ரல் 06, 2025 இரவு 07:22 வரை நீடிக்கிறது. ஏப்ரல் 06ம் தேதி நாளை காலை 11:08 மணிமுதல் மதியம் 01:39 வரையில் வழிபாடு செய்ய நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. ராமரின் பிறப்பிடமான அயோத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூரில் இருக்கும் ராமர், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையும் நாளை நடைபெறும்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே..
தீன்மையும் பாவமும் சிதைந்து தேயுமே..
ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே..
இம்மையே "ராமா" என்னும் இரண்டெழுத்தால்..
Click Here to Get Rama Navami WhatsApp Status Pictures in Tamil