ஏப்ரல் 05, கோடம்பாக்கம் (Cinema News): ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கி வழங்கிய ஆதிக், தனது பாணியில் தல ரசிகராக நடிகர் அஜித் குமாரை இயக்கி படத்தை வழங்கி இருக்கிறார். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள இப்படம், 10 ஏப்ரல் 2025 அன்று படம் திரையரங்கில் வெளியாக (Good Bad Ugly Release Date) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Microsoft 50th Anniversary: 'மைக்ரோசாப்ட்' தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு.. நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்..!
சுப்ரீம் சுந்தர் பேட்டி:
சமீபத்தில் படத்தின் ஓஜி சம்பவம் (OG Sambavam), காட் ப்ளஸ் யு (God Bless U) ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, படத்தின் டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், படம் மிகப்பெரிய அளவில், ரசிகரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடராக அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தபோது கூறினார்.
குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் (Good Bad Ugly Tamil Trailer):