Coconut Water (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 05, டென்மார்க் (World News): டென்மார்க் நாட்டில் வசித்து வரும் 69 வயதுடைய முதியவர், சரியான முறையில் பதப்படுத்தப்படாத இளநீரை குடித்ததால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு நடந்த முதியவரின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. முதியவர் தனது வீட்டின் சமையல் அறையில், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட இளநீரை குடித்ததால் மரணித்ததாக கூறப்படுகிறது. சென்னை: இரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது.! 

உடல்நலக்குறைவால் மரணம்:

இளநீரை குடித்த முதியவருக்கு சிலமணிநேரத்திற்கு பின்னர் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், வாந்தி, குழப்பம், சுயநினைவை இழத்தல், குமட்டல் ஆகிய உடல்நலக்கோளாறு காரணமாக அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது உடலை எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு மருத்துவர்கள் உட்படுத்தியபோது மூளை வீக்கம் தொடர்பான பிரச்னையும் இருந்தது உறுதியானது. முதியவர் நேரடியாக இளநீரை குடித்தபோது அதன் சுவை மாரி இருப்பதை உணர்ந்துள்ளார். இதனால் சிறிதளவு மட்டுமே இளநீரை குடித்து, பின் உடல்நலக்குறைவு குறித்து விவரித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த பின் உயிரிழப்பும் நடந்துள்ளது.

மருத்துவர்கள் எச்சரிக்கை:

வீட்டின் அறையில் சுமார் 1 மாதம் வரையில் பிரிட்ஜில் இல்லாமல் வெளியில் சேமித்து வைக்கப்பட்ட இளநீர் அவரின் உயிரை பறித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளிர்பானங்கள் உட்பட பழச்சாறுகளை நாம் பிரிட்ஜில் வைத்தாலும், அதனை உரிய காலங்களில் பயன்படுத்தி விடவேண்டும். மேற்கூறிய விஷயத்தில் இளநீர் பல நாட்கள் பிரிட்ஜ் இல்லாமல் வெளியிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் பூஞ்சை போன்றவை உண்டாகி விஷத்தன்மை ஏற்பட்டுள்ளது. பிரிட்ஜில் வைத்தாலும் 3 முதல் 5 நாட்கள் அவகாசம் தான். அதனை தாண்டினால் நாம் சேமித்தது வைத்த பழசாறு கெட்டுப்போக தொடங்கிவிடும் அல்லது அதன் தன்மை மாறிவிடும். அதனை உடல் ஏற்றுக்கொள்ளாது.