PM Modi at Rameswaram (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 06, இராமேஸ்வரம் (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பனில், புதிய பாம்பன் இரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi Rameswaram Visit), ரூ.8300 கோடி அளவிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வணக்கம், என் இனிய அன்பு தமிழ் சொந்தங்களே! இன்று ராம நவமி 2025 நன்னாள் சிறப்பிக்கப்படுகிறது. இந்நாளில் ராமரை வணங்கியது என் மனதுக்கு அமைதி, மகிழ்ச்சியை தருகிறது. ராமநாத சுவாமி கோவிலில் இறைவனின் அருள் கிடைத்து. இன்று உங்களால், உங்களின் முன் 8300 கோடி அளவிலான நலத்திட்டங்கள் தேசத்துக்காக அர்பணிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு பங்கு உண்டு:

பாம்பன் பாலம் வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. எமது அரசு பொறுப்பேற்றதும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திட்டம் முடிக்கப்பட்டது. சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெறுக பாம்பன் புதிய இரயில் பாலம் உதவுகரித்து. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா இரட்டிப்பு வளர்ச்சி என்ற நிலையை எட்டியுள்ளது. பல திட்டங்களுக்கு 6 மடங்கு அதிகமான நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இது அப்துல் கலாமின் மண். அவர் பிறந்த மண்ணில் இந்தியாவிலேயே முதல் முறையாக தொழில்நுட்பத்தை தாங்கிய மிகப்பெரிய இரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணத்தில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. மாநிலத்தின் வல்லமை உயரும் போதெல்லாம் இந்தியாவின் வளர்ச்சி உயருகிறது. PM Narendra Modi: "ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் நம்முடன் இருக்கட்டும்" - பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீ ராமநவமி வாழ்த்து.! 

PM Modi Visits Rameswaram (Photo Credit: @ANI X)
PM Modi Visits Rameswaram (Photo Credit: @ANI X)

அழுபவர்கள் அழட்டும்:

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முந்தைய காங்கிரஸ் அரசுடன் ஒப்பிடும்போது, திமுக-காங்கிரஸ் கூட்டணி வழங்கிய நிதியை விட கூடுதலாக எனது தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி ஆகும். தமிழ்நாட்டின் கட்டமைப்பே இந்திய அரசின் முதன்மை ஆகும். இரயில்வே துறைக்கு 7 மடங்குக்கும் அதிகமான பட்ஜெட் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் புல்லட் இரயில் வழித்தடம் அமைக்கப்படும். சரக்கு இரயில் வழித்தடமும் அமைக்கப்படும். வந்தே பாரத் உட்பட பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வுளவு திட்டங்கள் வழங்கியபின்னரும் சிலர் அழுகுகிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும்.

வேலைவாப்புகள் உருவாக்கும்:

அவர்கள் அழுதுகொண்டு இருக்கட்டும். 2014 க்கும் முன்பு வரை இரயில் துறை திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 900 கோடி மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்தது. அன்று காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்தது. நடப்பு ஆண்டில் இரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.6000 கோடிக்கும் அதிகம் ஆகும். மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டில் உள்ள 77 இரயில் நிலையத்தை புதுமைப்படுத்துகிறது. இதில் ராமேஸ்வரம் இரயில் நிலையமும் ஒன்று ஆகும். இறுதியாக 10 ஆண்டுகளில் பிரதான் மந்திரி திட்டத்தில், மத்திய அரசின் உதவியோடு பலரும் பலனடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ உட்பட பல கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தியுள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பால் பலன் பெறுகின்றனர். பிரதம மந்திர திட்டத்தின் கீழ் 12 இலட்சம் பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய காணொளி: