PM Narendra Modi | Lord Sri Rama (Photo Credit: @NarendraModi / @Sriramrpckanna1 X)

ஏப்ரல் 06, புதுடெல்லி (New Delhi): உலகெங்கும் வாழும் இந்துக்களால் இன்று விஷ்ணுவின் 7 வது அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறந்தநாள் ஸ்ரீ ராமநவமி தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று ஸ்ரீ ராமர், விஷ்ணு, பெருமாள் உட்பட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பலரும் தங்களின் வீட்டிலும் விரதம் இருந்து வழிபாடு செய்கின்றனர். நல்லொழுக்கம், அமைதி, பேரன்பு ஆகியவற்றுக்கு அடையாளமாக வாழ்ந்த ஸ்ரீராமரின் வழியில் நடக்க பலரும் இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர். Sri Rama Navami 2025: ஸ்ரீ ராம நவமி 2025: நல்ல நேரம் எப்போது? விரதமுறைகள் என்ன? இதையெல்லாம் மறந்துடாதீங்க! 

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து:

பலரும் தங்களின் ராமநவமி வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துக்கள்! பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கும். நமது அனைத்து முயற்சிகளிலும் நம்மை ஸ்ரீராமர் வழிநடத்தட்டும். இன்று பிற்பகுதியில் ராமேஸ்வரத்தில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!" என கூறியுள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து:

அதேபோல, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, "பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த ஶ்ரீ ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றிக் கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீராம்" என தனது வலைப்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துபதிவு:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துபதிவு: