ஏப்ரல் 05, திருவொற்றியூர் (Chennai News): சென்னையில் உள்ள திருவொற்றியூர் இரயில் நிலையத்தில், இளம்பெண் ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கொருக்குப்பேட்டை இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நிகழ்விடத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. கல்லூரியின் இறுதி நாள் பேச்சில் இறுதி மூச்சை விட்ட கல்லூரி மாணவி.. சிரித்தபடி மயங்கி விழுந்து மரணம்.!
இளைஞர் அதிரடி கைது:
இந்நிலையில், இரயில் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பழைய உஸ்மான்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் தில்லி பாபு என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். பெண் புகார் கொடுத்த ஒருசிலமணிநேரத்திலேயே விரைந்து விசாரணை நடத்தப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். இதேபோல, சமீபத்தில் பழவந்தங்களில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3