Pat Cummins Vs Shubman Gill IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 06, ஹைதராபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற 2 ஆட்டங்களில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெற்றி அடைந்தன. அதனைத்தொடர்ந்து, இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, நடப்பு தொடரின் 19 வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் (Sunrisers Hyderabad Vs Gujarat Titans IPL 2025) இடையே போட்டி நடக்கிறது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலியில் நேரலையில் பார்க்கலாம். CSK Vs DC Highlights: சேப்பாக்கத்தில் மயான அமைதி.. சென்னை கோட்டையில் கொடிநாட்டிய டெல்லி.. மாஸ் வெற்றி.! 

சன்ரைசர்ஸ் எதிர் டைட்டன்ஸ் (Sunrisers Vs Titans IPL 2025):

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலின்படி (IPL 2025 Point Table) தான் எதிர்கொண்ட 3 போட்டியில் 2ல் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், 4ல் 1 போட்டியில் மட்டும் வென்று இறுதி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் இன்று களம்காண்கிறது. சொந்த மண்ணில் முதல் போட்டியில் வெற்றி அடைந்த ஹைதராபாத், பின் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் இன்று நடக்கும் ஆட்டத்திலாவது ஹைதராபாத் அணி சொந்த மண்ணில் வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று இரவு 07:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெறுகிறது.