ஏப்ரல் 06, அரக்கோணம் (Arakkonam News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரைச் சேர்ந்தவர் பிரேம் (வயது 26). சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக, ஆம்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்தார். இவர்கள் பயணித்த இரயில் மதியம் அரக்கோணம் பகுதியில் சென்றது. பிரேம் மற்றும் அவரது உறவினர்கள் அரக்கோணம் இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். 14-Year-Old Girl Dies: வகுப்பறையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்; மயங்கி விழுந்து பரிதாப பலி.!
சக்கரத்தில் சிக்கி பலி:
அப்போது, உறவினர் ஒருவர் இரயிலில் தனது கைப்பையை விட்டதாக தெரிவித்துள்ளார். இதற்குள் இரயில் புறப்படத்தொடங்கவே, பிரேம் கைப்பையை எடுக்க இரயிலில் ஏற முயற்சித்தார். ஓடும் இரயிலில் ஏற முற்பட்டவர் தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த இரயில்வே காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இளைஞரின் மரணம் காரணமாக இரயில் ஒருமணிநேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது.