நவம்பர் 18, மங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், மங்களூரு (Mangaluru) புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே உள்ள தனியார் ரிசார்ட்க்கு சொந்தமான நீச்சல் குளத்தில் (Swimming Pool), மைசூரை சேர்ந்த 3 இளம்பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் மைசூர் (Mysore) குருபரஹள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 21), ராமானுஜ சாலையை சேர்ந்த நிஷிதா (வயது 21) மற்றும் விஜய் நகர் பகுதியைச் சேர்ந்த பார்வதி (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் அமல்..!
இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் (நவம்பர் 16) பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று (நவம்பர் 17) காலை 8.30 மணிக்கு நீச்சல் குளத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது, மூவரில் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக போனை ஆன் செய்து வைத்துவிட்டு, 6 அடி ஆழம் கொண்ட குளத்தின் அடிப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர் நீரில் மூழ்கியதை பார்த்த இருவரும், அப்பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இதனால் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உல்லால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், இதுகுறித்து பெண்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், ரிசார்ட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
ఈత రాక స్విమ్మింగ్ పూల్లో మునిగి ముగ్గురు యువతులు మృతి 3 engineering Girl students from Mysore died drowning in swimming pool in Karnataka. If u cannot swim don’t go near water pic.twitter.com/poe7Z1KyJA
— Lokesh journo (@Lokeshpaila) November 18, 2024