Tomorrow Weather (Photo Credit: LatestLY)

நவம்பர் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்‌தில்‌ வடகிஇழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌ மற்றும்‌ புதுவையிலும்‌ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்‌தில்‌ திருநெல்வேலி, கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை, தென்காசி, அரியலூர், திருச்சி, தேனி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான (Today Weather) வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், மாலத்தீவு மற்றும்‌ பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ பகுதிகள்‌ முதல் தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌ வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி நிலவுகிறது. Chennai Shocker: காதலியை கர்ப்பமாக்கி ஓட்டம்பிடித்த வடமாநில இளைஞர்; குழந்தையை குளத்தில் வீசி அதிர்ச்சி தந்த இளம்பெண்.. சென்னையில் பகீர்.! 

இன்றைய வானிலை (Today Weather):

17-11-2024 இன்று தமிழகத்துல்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும்‌, காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

18-11-2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 19-11-2024 முதல்‌ 23-11-2024 வரையில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை வானிலை (Chennai Weather Today):

சென்னை மற்றும்‌ புறநகர்பகுதிளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌ என தெரிவிக்கப்படுகிறது.