Benjamin Netanyahu (Photo Credit: @ANIDigital X)

நவம்பர் 18, ஹமாஸ் (World News): பாலஸ்தீனத்தின் ஆதரவு ஆயுதக் குழுவான ஹமாஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 20 நிமிடங்களில் 5000 க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏறி இஸ்ரேலை திணறடித்தது ஹமாஸ். மேலும் ஏராளமான ஹமாஸ் படையினர் பேராஷூட் மூலமாக எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதுமட்டுமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சிறைபிடித்து சென்றனர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: ஹமாஸின் திடீர் தாக்குதலால் பெரும் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் (Israel Hamas War) தொடுப்பதாக அறிவித்தது. ஹமாஸின் கடைசி நபரினை அளிக்கும் வரை இந்தப் போர் தொடரும் என்று சூளுரைத்தது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இன்று வரை நடத்தி வருகிறது. இந்தப் போரினால் சுமார் 42 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

அமெரிக்காவின் ஆதரவு: ஹமாஸின் வேர் அறுத்த பின்னரே ஓய்வோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்கா முழு ஆதரவளித்து வருகிறது. மேலும் இந்தியா இங்கிலாந்து உள்ளிட்ட பல உலக நாடுகள் தீவிரவாதத்தை எப்போதும் ஏற்க முடியாது எனக்கூறி இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. அதேசமயம் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கும் உதவிகளை செய்து வருகின்றனர். இருப்பினும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து வரும் உலக நாடுகள் போர் நிறுத்தத்தினையும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவாறு வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்துகிறது. Miss Universe 2024: மிஸ் யுனிவர்ஸ் அழகிப்பட்டம் வென்ற டென்மார்க் அழகி..! 21 வயதில் மாபெரும் சாதனை.!

ஈரான் தாக்குதல்: இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தெக்ரானில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் கூறியது. அதன்படியே தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரண்டு முறை பெரும் தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என்றும் மிரட்டி வருகிறது. மேலும் இஸ்ரேலை ஒடுக்க அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலகப்போர் மூன்று நடக்குமோ என்று உலக நாடுகளே பீதியில் உள்ளன.

இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமான பேச்சு பொருளாக இருக்கிறது. இந்தப் போரினால் காசா மக்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளனர். மக்களின் சிவில் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும் இஸ்ரேல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. போரினால் பல மக்கள் தங்களது இருப்பிடத்தினை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக நாடு கடந்து செல்கின்றனர். அதைவிட கொடூரம் மனிதாபிமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை தேவைப்படுவதாக சர்வதேச வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். போலியோ பாதிப்புகளும் அங்கு மீண்டு வரும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் மக்கள் போராட்டம்: தொடர்ந்து இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால் தங்களிடம் இருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹமாஸிடம் இருக்கும் பணயக் கைதிகளை விடுவித்து போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டையும் ஜெருசலேமில் உள்ள பிரதமர் அலுவலகத்தையும் இஸ்ரேல் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தியும் மறு தேர்தலை நடத்தக் கோரியும் பொதுமக்கள் முழக்கம் எழுப்பினர்.