நவம்பர் 18, ரியோ டி ஜெனிரோ (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் இருந்து நைஜீரியாவிற்கு புறப்பட்டார். இந்த பயணத்தின் அடுத்தக்கட்டமாக பிரதமர் இன்று (நவம்பர் 18) ஜி 20 உச்சிமாநாட்டில் (G20 Summit) பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் தரையிறங்கினார். Israel PM Benjamin Netanyahu: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. காரணம் என்ன?!
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தரையிறங்கியுள்ளேன். பல்வேறு உலகத் தலைவர்களோடு உச்சி மாநாட்டின் ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள பேச்சுக்களை எதிர்பார்க்கிறேன். உலக நாடுகள் இந்த G20 உச்சி மாட்டில் ரஷ்ய- உக்ரேன் போர் போன்ற நிகழ்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்க முடிவு காண நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
A celebration of Indian culture in Brazil! Gratitude for a memorable welcome in Rio de Janeiro… pic.twitter.com/osuHGSxpho
— Narendra Modi (@narendramodi) November 18, 2024