Meta Logo | Mark Zuckerberg (Photo Credit: Wikipedia Commons / Wikipedia)

நவம்பர் 15, சான் பிரான்சிஸ்கோ (Technology News): உலகெங்கிலும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் (Facebook) முன்னணியில் உள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் பேஸ்புக். இந்த பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதனிடையே மெட்டா நிறுவனம் பேஸ்புக்கில், மார்க்கெட்பிளேஸ் (Facebook Marketplace) எனும் விளம்பர சேவையில் ஈடுபட்டு வருகிறது. How To Get Rich: நீங்க பணக்காரர் ஆக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க..!

இந்நிலையில், மெட்டா நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும் வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல நாடுகள் புகார் தெரிவித்தது. இதுபற்றி 27 நாடுகளின் அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் இறுதியில், மெட்டா நிறுவனத்துக்கு சுமார் 80 கோடி யூரோ (ரூ.7.120 கோடி) அபராதம் விதித்துள்ளது. இதற்கு மெட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸின் வெற்றி முற்றிலும் நுகர்வோர் தேவையை அடிப்படையாகக் கொண்டது என்றும், எந்த வணிக அழுத்தத்திலும் அல்ல என்றும் மெட்டா கூறுகிறது. இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.