RSA Vs IND 4th T20I (Photo Credit: @JioCinema X)

நவம்பர் 16, ஜோகன்னஸ்பெர்க் (Sports News): தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் (RSA Vs IND) அணி நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-1 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. நேற்று (நவம்பர் 15) ஜோகன்னஸ்பெர்க் (Johannesburg) மைதானத்தில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 283 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. IND Vs SA T20i: திலக் - சஞ்சு ஜோடி மாபெரும் சாதனை., தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியை கைப்பற்றியது இந்தியா.!

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே சஞ்சு சாம்சன் (Sanju Samson) அதிரடியாக விளையாடி வந்தார். ஆட்டத்தின் 10 ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் சிக்ஸ் அடித்தார்.

அவர் அடித்த சிக்ஸ் கூட்டத்தில் இருந்த இந்திய ரசிகை ஒருவரின் முகத்தை பதம் பார்த்தது. அவருக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், கன்னத்தில் வீக்கம் இருந்ததால் ஐஸ் பேக் வைக்கப்பட்டது. அந்த ரசிகை வலியால் அழும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது. அந்த வீடியோ காட்சி பின்னர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

ரசிகையின் முகத்தில் தாக்கிய பந்து: