AFG Vs UGA Highlights: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி..! 58 ரன்களில் சுருண்ட உகாண்டா படுதோல்வி..!
இன்று காலை நடைபெற்று முடிந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பரூக்கி 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஜூன் 04, கயானா (World News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 5-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான்-உகாண்டா (AFG Vs UGA) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 183 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்களை குவித்தார். Lok Shaba Election Results 2024: இந்தியா தேர்தல்கள் 2024: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தர்மபுரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.!
பின்னர், 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணி, ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இறுதியில், 58 ரன்கள் மட்டுமே எடுத்து, 16 ஓவரில் உகாண்டா அணி ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பசல் பரூக்கி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்ட ஆப்கானிஸ்தான் அணியில் பரூக்கி 5 விக்கெட், நவீன் உல் ஹக் மற்றும் கேப்டன் ரஷீத் கான் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை பரூக்கி பெற்று சென்றார்.