ஏப்ரல் 23, புதுடெல்லி (New Delhi): சனி கோளில் 146 நிலாக்கள் உள்ளன. அதில் பூமி போன்ற வானிலை மற்றும் திரவ அமைப்பு சனி (Saturn) கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டானில் காணப்பட்டுள்ளது. அதனால் அதை ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்துள்ளது. இதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "டிராகன்ஃப்ளை திட்டம்" (NASA's Dragonfly Mission) என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம், டைட்டனை சுற்றி தட்டான் போன்ற ட்ரோன் ஏரோ கிராஃப்ட் பறக்கும் கருவியை (Drone like aerocraft device) அனுப்ப முடிவு செய்துள்ளது. World Book Day 2024: "கற்றுத் தருவதில் கலங்கரை விளக்கம்.. காலப்பதிவின் கண்கவர் அடையாளம்.." உலக புத்தக தினம் இன்று..!
இந்த திட்டம் 3.35 பில்லியன் டாலர் செலவில் தொடங்கப்படும் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 2034 இல் டைட்டனை அடையும் வகையில், டிராகன்ஃபிளை பணியானது நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை நாசா வரும் 2028 ஆம் ஆண்டில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.