ஏப்ரல் 15, மும்பை (Mumbai): இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வழி கற்பித்தல் நிறுவனமான பைஜூ (Byju), குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஆகும். இந்நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக அர்ஜுன் மோகன் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாகவும், இதனால் பைஜூவின் நிறுவனர் ரவீந்திரன் தலைமைபொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரியிலேயே முடிவு? தி எக்கனாமிக் டைம்ஸ் இதழின் பிரத்தியேக தகவல்படி, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பைஜூ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், அர்ஜுன் மோகனை தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் ஆறு மாதகாலத்திற்குள் வெளியில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பைஜூ நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்பட்டு வந்த ரவீந்திரன் வெளியேற்றப்படுவதற்கான காரணங்கள் உறுதி செய்யப்படவில்லை. 1,11,111 Laddu to Ayodhya Ram Temple: அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு செல்லும் 1,11,111 கிலோ லட்டுகள்; ராம நவமியை முன்னிட்டு பிரசாதங்கள் அனுப்பி வைப்பு.!
தலைமை பொறுப்பேற்கும் நிறுவனர்: ஆனால், கடந்த ஓராண்டாக பைஜூ நிறுவனம் நேரடியாக ஒருசில சிக்கலில் தவித்தது. இதனால் உயர்மட்ட அளவில் அது தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதுவே அர்ஜுனின் வெளியேற்றத்திற்கு காரணம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் மோகனின் வெளியேற்றத்தை தொடர்ந்து, ரவீந்திரன் தலைமைபொறுப்பேற்று அவர் பைஜூவின் செயல்பாடுகளை கண்காணிப்பார். பைஜூ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், 4 ஆண்டுகளுக்கு பின் ரவீந்திரன் தலைமை பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
ஆலோசகராக தொடர வாய்ப்பு: கடந்த வாரம் மோகன் தனது ராஜினாமாவை ரவீந்திரனிடம் சமர்ப்பித்து இருக்கிறார். தற்போதைய சூழலில் மோகன் பைஜூ நிறுவுவனத்தின் ஆலோசகராக தோராவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான பணியாளர்கள் பைஜூவில் வேலைபார்த்து வருகின்றனர். மூத்த நிர்வாகிகளிடம் ஏற்பட்ட பிரச்சனை, பண நெருக்கடி, பணிநீக்கம் உட்பட பல காரணத்தால் கடந்த இரண்டு மாதமாக சில ஊழியர்களின் சம்பளமும் பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. Chennai Shocker: காதல் விவகாரத்தில் பயங்கரம்; நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
பைஜூவின் வளர்ச்சிக்காக ரவீந்தரின் முயற்சி: மோகனின் வெளியேற்றத்திற்கு பின்னர் பைஜூவை வழிநடத்தும் ரவீந்திரன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டியூசன் சென்டர் வாயிலாக பைஜூவை மூன்று பிரிவாக ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பைஜூ தனது டியூசன் எண்ணிக்கையை 250 அளவில் குறைத்து, பெங்களூரில் செயல்படும் பல அலுவலகத்தையும் காலி செய்திருந்தது. ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த ரவீந்திரன் பல முதலீட்டாளர்களிடம் கடனும் செலுத்தி இருக்கிறார்.
நன்றி: எகனாமிக் டைம்ஸ் இதழ்
#etExclusive: #Byju’s India #CEO #ArjunMohan #resigns, founder #Raveendran to helm daily opshttps://t.co/CzJ6vMXemj
— Economic Times (@EconomicTimes) April 15, 2024