மார்ச் 14 (Health Tips Tamil): நாம் தினமும் பால் (Milk Products) அல்லது அது சார்ந்த பொருட்களை சாப்பிட்டு இருப்போம். காலை எழுந்ததும் பால், உணவின் போது சிறிதளவு நெய் (Ghee), மதிய உணவின்போது தயிர் (Curd), இரவில் ஏதேனும் பால் சார்ந்த இனிப்புகள் போன்றவற்றை சாப்பிட்டு இருப்போம். இதில் சிலருக்கு பால் பிடிக்கும், சிலருக்கு தயிர் பிடிக்கும், இன்னும் சிலருக்கு இவை இரண்டும் தவிர்த்து அதனால் தயாரிக்கப்படும் இனிப்பு மட்டுமே பிடிக்கும்.

தயிரில் (Benefits of Curd Food) உள்ள புரோட்டீன் பாலை விட விரைந்து செரிமானம் அடைந்துவிடும். தயிர் குளிர்ச்சியை மட்டுமல்லாது, செரிமான சக்தியையும் வழங்குவது ஆகும். பால் குடித்தால் மணிநேரத்தில் 32 விழுக்காடு மட்டுமே செரிமானம் ஆகும். ஆனால், தயிரோ மணிநேரத்தில் 91% அளவு செரிமாணமாகிவிடும்.

பாலினை நமக்கு தயிராக மாற்றிக்கொடுக்கும் பாக்டீரியா, குடலில் ஏற்பட்டு இருக்கும் நோய்கிருமிகள் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதுவே செரிமான சக்தியையும் அதிகரித்து கொடுக்க உதவுகிறது. அதனாலேயே மருத்துவர்கள் வயிறு சரியில்லாத நேரத்தில் தயிர் மற்றும் சோறை பரிந்துரைக்கின்றனர். Mother In Law Torture: சொந்த மருமகள் மீது சந்தேக நோய்.. உறங்கிக்கொண்டிருந்த மருமகளை ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார்..!

தினமும் தயிரை உணவில் அங்கமாக சேர்த்து வர பல நன்மைகள் கிடைக்கும். வைட்டமின் பி12, கால்சியம், பாசுப்பிரஸ், மெக்னீசியம், தாது உப்புகள் போன்றவையும் தயிரில் நிறைந்து காணப்படுகிறது. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்ரிக்கு நன்மை தரும்.

நமக்கு மன அழுத்தம், சோர்வினை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரத்தலை தயிர் கட்டுக்குள் வைக்கிறது. தயிரை சாப்பிட உகந்த நேரம் மதியம் தான். இரவு நேரத்தில் சாப்பிட்டால் சிறிதளவு சர்க்கரை அல்லது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இது செரிமானத்திற்கு வழிவகை செய்யும்.

தயிரோடு தேன் சேர்த்து சாப்பிடுவது பல்வலி, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை தரும். உடலுக்கு உடனடி ஆற்றலும் கிடைக்கும். சிறுநீரக பிரச்சனை இருந்தால், அவற்றில் இருந்தும் விடுதலை கிடைக்கும். தயிருடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடுவது மலச்சிக்கல், செரிமான கோளாறுகளில் இருந்து விடுதலை தரும்.