Mother In Law Torture: சொந்த மருமகள் மீது சந்தேக நோய்.. உறங்கிக்கொண்டிருந்த மருமகளை ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார்..!

மருமகளின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாமியார், மருமகளை கொடூரமாக கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது. ஆசிட் கண்களின் மீது பட்டு இளம்பெண்ணுக்கு பார்வை பறிபோயுள்ளது.

Mother In Law Torture: சொந்த மருமகள் மீது சந்தேக நோய்.. உறங்கிக்கொண்டிருந்த மருமகளை ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார்..!
Girl Affects Acid Attack (File Photo)

மார்ச் 14, விருத்தாச்சலம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் (Vriddhachalam, Cuddalore) நகரில், விருத்தாச்சலம் - கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகேஷ் ராஜ். இவரின் மனைவி கிருத்திகா (வயது 25). தம்பதிகளுக்கு (Couple) திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அவிநாசியில் (Avinashi, Coimbatore) முகேஷ் ராஜ் பணியாற்றி வரும் நிலையில், அவரின் தாயார் ஆண்டாள் (வயது 55) தம்பதிகளோடு வசித்து வருகிறார். முகேஷ் விடுமுறைக்கு ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடவடிக்கையில் மாமியார் (Mother In Law Doubts Daughter In Law Behavior) ஆண்டாளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் வீட்டில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் கிருத்திகா வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். Team India: சத்தமே இல்லாமல் இமாலய சாதனை படைத்த இந்திய அணி.. இந்திய மண்ணில் சிங்கமாய் கர்ஜிக்கும் ஜாம்பவான்கள்.! 

அப்போது, வீட்டின் கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து வந்த ஆண்டாள், மருமகளின் முகம், காது, கண், மர்ம உறுப்புகளின் மீது ஊற்றியுள்ளார். கொசுவிரட்டி மருந்தையும் வாயில் ஊற்றி கொலை முயற்சியும் நடந்துள்ளது.

பதறிப்போய் அலறிய கிருத்திகாவின் அபயக்குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவசர ஊர்தி உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் கிருத்திகாவின் வலது கண் பார்வை பறிபோனது உறுதியானது.

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கிருத்திகா, அங்கிருந்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் காவல் துறையினர் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Mar 14, 2023 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).