Tamilnadu Rains (Photo Credit: @NewsMobileIndia X)

அக்டோபர் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) நேற்று (22-10-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை 5.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஒரிசா தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

டானா புயல் (Dana Cyclone):

இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது, வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் தேதி இரவு முதல் 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. Road Accident: சாலையில் மாடு மோதி விபத்து; கல்லூரி மாணவி படுகாயம்.. பதைபதைக்கும் வீடியோ உள்ளே..!

இன்றைய வானிலை (Today Weather):

23.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

24.10.2024 அன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

22.10.2024 அன்று அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌, மத்‌தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல்‌ 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசலாம். 22.10.2024 இன்று மத்தியமேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.