டிசம்பர் 31, சென்னை (Technology News): உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதை போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்கள் இந்த புத்தாண்டு (New Year) ஜனவரி 1 ஆம் தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றுதான். நள்ளிரவில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வது வழக்கம். Black Moon: இன்று வானில் தோன்றப் போகும் ‘பிளாக் மூன்’.. எப்போது காண முடியும்? விபரம் உள்ளே..!
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுல்:
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் (Google Doodle) போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த சில மணி நேரங்களில் 2024-ஆம் ஆண்டு நிறைவு பெற உள்ள சூழலில் அதனை குறிப்பிடும் வகையிலும், 2025-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையிலும் 2024-க்கு டூடுல் போட்டு பிரியாவிடை கொடுத்துள்ளது கூகுள். சிறிது மணி நேரத்தில் வருடம் முடியப்போவதை குறிப்பிட்டு, அனைவரையும் கவரும் வகையில் க்யூட்டான டூடுல் போட்டுள்ளது கூகுள்.