Bigg Boss Tamil Season 8 Promo (Photo Credit: @VijayTelevision X)

ஜனவரி 02, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 87 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்:

இறுதிக்கட்டத்தை நோக்கி ஆட்டம் நகருவதால், போட்டியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்களின் இலக்கை நோக்கி பயணித்து வருகின்றனர். தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், வைல்ட் கார்டில் வந்த மஞ்சரி ஆகியோர் இறுதிப்பயணத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ராயன், ஜாக்குலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Bigg Boss Tamil Season 8: தெளிவா முடிச்சிவிட்டீங்க - ராயன் Vs முத்துக்குமரன் வாக்குவாதம்.. பிக் பாஸில் புத்தாண்டின் தொடக்கமே அமர்க்களம்.!

டிக்கெட் டு பினாலே:

இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே போட்டி நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அந்த ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு தேர்வாகவுள்ளார். இதனிடையே இன்று வெளியான புரோமோவில், பவித்ராவும், மஞ்சரியும் மோதிக் கொண்டது வந்திருக்கிறது. பவித்ராவிடம் தன் வேலையை காட்டப் பார்த்தார் மஞ்சரி. நான் எல்லோருடையதும் ட்ரை பண்ண மாதிரி உன்னுடையதும் ட்ரை பண்ணேன் என்றார் மஞ்சரி. நான் ரொம்ப பொறுமையாக கேட்கிறேன். அப்படி இல்லைனா சொல்லு. நீ அப்படி பண்ற, அக்லினு சொல்லாத மஞ்சரி என்றார் பவித்ரா. நாங்க இரண்டு பேரும் பேசி வச்சுட்டு வந்து எடுக்கல என மஞ்சரி சொல்ல பேசி வச்சுட்டு வந்து யாருமே எடுக்கல, கண்ண காமிச்சதை நான் பார்த்தேன். அதனால் நான் கேட்டேன் என்றார் பவித்ரா. டென்ஷன் ஆவுது இவ இப்படி பேசுறதே என்று பதிலுக்கு மஞ்சரியும் கோபப்படுகிறார்.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: