ஜனவரி 02, குன்றத்தூர் (Chennai News): சென்னையில் உள்ள குன்றத்தூர் (Kundrathur), நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சிங்காரி (42). இவரின் மகன் சிவராமன். இவர்கள் இருவரும் புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர். குன்றத்தூர் பகுதியில் இவர்கள் சென்றபோது, குதிரை வண்டி ஒன்று வேகமாக, சத்தம் எழுப்பியவாறு வந்தது.
மகன் கண்முன் பலி:
அப்போது, சாலையில் இருந்த மாடு திடீரென மிரண்டு சிங்காரியை முட்டி இருக்கிறது. இதில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த சிங்காரி, தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். சிங்காரியின் மகன் அவசர உதவிக்காக காத்திருந்த சில நொடிக்குள், மகனின் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார். Gold Silver Price: ரூ.58 ,000 ஐ நெருங்குகிறது.. தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு..!
காவல்துறையினர் விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் காவல்துறையினர், விரைந்து வந்து சிங்காரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குதிரை வண்டியை இயக்கி வந்த சோமங்கலம், புதுப்பேடு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடு முட்டி தொடரும் உயிரிழப்பு:
ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீதியில் திரியும் மாடுகளால் தொடர் விபத்து, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டு வந்தது. இதனால் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே இந்த சோகமும் நடந்துள்ளது.
கவனமாக இருங்கள்:
அதேபோல, சாலைகளில் செல்வோர் தூரமாக மாடுகள் இருப்பதை கண்டாலும், வாகனத்தின் வேகத்தை குறைத்து, கவனமாக செல்லுங்கள். நமது ஒரு குருட்டு தைரியமும் மிகப்பெரிய விபத்துக்கு வழிவகை செய்யும் என்பதை மறக்க வேண்டாம். மிதவேகம் மிகநன்று.