ஜனவரி 02, லோனாவாலா (Maharashtra News): உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதை போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்கள் இந்த புத்தாண்டு (New Year) ஜனவரி 1 ஆம் தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றுதான். நள்ளிரவில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வது வழக்கம். பலர் அன்று கோவில் செல்வது வழக்கம். Cannabis Smuggling: காரில் கடத்திவரப்பட்ட கஞ்சா.. தடுக்க முயன்ற காவலர் மீது காரினை ஏற்றி தப்பிச் சென்ற கும்பல்.., வீடியோ உள்ளே..!
பக்தர்கள் மீது தேனீக்கள் திடீர் தாக்குல்:
புத்தாண்டின் முதல் நாளில் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து புனித யாத்திரை தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டையொட்டி கார்லாவில் உள்ள வெஹர்கான் எக்விரா கோட்டையில் அன்னை ஈக்வீரனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது கோவில் வளாகத்திற்குள் தடை செய்யப்பட்டிருந்தும், சில பக்தர்கள் கோவில் அருகே பட்டாசுகளை வெடித்தனர். இந்த பட்டாசுகள் தேன் கூடுகளை சேதப்படுத்தியதால், தேனீக்கள் ஆத்திரமடைந்து பக்தர்களை தாக்கின. இந்த திடீர் தாக்குதலில் 20 முதல் 25 பக்தர்கள் காயமடைந்தனர். தேனீக்கள் தாக்கியதில் காயமடைந்த பக்தர்கள் உடனடியாக எக்விரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.