Lipstick (Photo Credit: Pixabay)

ஜனவரி 02, சென்னை (Chennai): அலங்கார ஒப்பனையில், கட்டாயமாக பயன்படுத்துவது என்ற இடத்தில் இருப்பது லிப்ஸ்டிக் (Lipstick). தவிர்க்க முடியாத அழகுசாதன பொருட்களாக இருக்கும் லிப்ஸ்டிக், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆண் / பெண்ணால் பயன்படுத்தப்படுகிறது. நமது ஊர்களில் பெரும்பாலும் ஆண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில்லை எனினும், தன்னை அழகுற காண்பிக்க வேண்டும் என நினைக்கும் நபர்கள், தங்களின் தோற்றத்திற்கேற்ப அதன் அளவை மறுபடுத்தி பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக பெண்கள் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றே. மேக்கப் மீது விருப்பம் இல்லாத பெண்களும் கூட லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு தனது அழகை மெருகேற்றிவிடுவார்.

தீங்கை ஏற்படுத்தும் ரசாயனங்கள்:

விருப்பப்பட்டு உதட்டில் பூசிக்கொள்ளும் லிப்ஸ்டிக் தேர்வு செய்வதில், அதன் விரும்பிகள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இன்றளவில் ரசாயனங்கள் கலக்கப்பட்ட லிப்ஸ்டிக் அதிகம் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவை வசீகரமான தோற்றத்தை எடுத்துக்கொடுக்கும் எனினும், அதன் நச்சு உதடு வழியே உடலுக்குள் சென்று உடல்நல பாதிப்பையும், உதடு சார்ந்த பிரச்சனைகளையும் உண்டாக்கும். லிப்ஸ்டிக்களில் குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் என தீங்கை ஏற்படுத்தும் நச்சுக்கள் இருப்பது ஆய்வுகளிலும் உறுதி செய்யப்படுகிறது. முக்கியமாக 24 மணிநேரத்திற்குள் 2 முதல் 3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது, அதில் இருக்கும் குரோமியம் உடலில் கலக்க வழிவகை செய்யும். இதனால் உடல்நல பாதிப்பும் ஏற்படலாம். Ponnaganni Keerai Benefits: பொன்னாங்கண்ணி கீரையின் அசத்தல் நன்மைகள்; உடனே வாங்கி சாப்பிடுங்க.! 

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

லிப்ஸ்டிக்கில் இருக்கும் ஈயம் உடலின் ஆரோக்கியத்திற்கு கேடுதரும். நீண்டகால ஆரோக்கிய பிரச்சனையும் உண்டாகும். பித்தலேட்டுகள் நாளமில்லா சுரப்பியின் செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றும். பாளி ஏத்திலின், கிளைகோலிக் ஆசிட் போன்றவையும் லிப்ஸ்டிக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். பாரபின் எனும் மெழுகு ரசாயனம் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படும். இது சருமத்திற்க்குள் ஊடுருவி சரும எரிச்சல், புற்றுநோய் போன்றவற்றையும் உண்டாக்கும். லிப்ஸ்டிக்கில் இருக்கும் நச்சுப்பொருள் சருமத்தின் நுண்துச்சைகள் வழியே உறிஞ்சப்பட்டு உடலுக்குள் அனுப்பப்படும். இதனால் அதிக லிப்ஸ்டிக் பூசினால் கட்டாயம் பக்கவிளைவுகள் விரைவில் கிடைக்கும்.

சிறுநீரக செயலிழப்பு, இனப்பெருக்க சிக்கல் அபாயம்:

லிப்ஸ்டிக் வாங்கும் பெண்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை கவனிப்பது, அதனை எந்த அளவு பயன்படுத்தலாம்? என தெரிந்து செயல்படுவது நல்லது. அதேபோல, லிப்ஸ்டிக் பயன்படுத்தியபின் உதட்டில் அரிப்பு ஏற்பட்டால், அது ஒவ்வாமை அறிகுறியாக இருக்கலாம் என்பதில் கவனம் கொள்ளுங்கள். லிப்ஸ்டிக்கில் இருக்கும் பிஸ்மத் ஆக்சிகுளோரைடு ரசாயனம் சரும செல்களை சிதைக்கும் தன்மை கொண்டது. லிப்ஸ்டிக்கின் நீண்ட ஆயுளுக்காக சேர்க்கப்படும் ரசாயனம் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறலையும் ஏற்படுத்தும். பெட்ரோ கெமிக்கல் நாளமில்லா சுரப்பியின் செயல்பாடுகளை மாற்றும். இதனால் அறிவாற்றல், இனப்பெருக்க சிக்கல் பிரச்சனைகள் கூட ஏற்படும். லிப்ஸ்டிக்கில் இருக்கும் காட்மியம், அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவோருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.

சில எளிமையான குறிப்புக்கள்:

அதிக அடர்நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், கட்டாயம் பக்கவில்லை நிச்சயம். அதனை அதிகம் பயன்படுத்த வேண்டாம். லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் பெட்ரோலியம் ஜெல்லை பயன்படுத்தலாம். இது உதட்டுக்கு பாதுகாப்பை வழங்கும். நச்சுக்கள் இல்லாத இயற்கையான மூலப்பொருட்கள் கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்கப்பட வேண்டும். வாரத்திற்கு அதிகபட்சம் 3 முறை மட்டுமே லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை / நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படலாம்.