ஜனவரி 01, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 86 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். Tamil Cinema: 2024ம் ஆண்டு மிகப்பெரிய தோல்வியில் தமிழ் சினிமா: 241 படங்களில் 18 மட்டுமே வெற்றி.. 223 படத்தயாரிப்பாளர்களின் நிலை?
இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்:
இருக்கட்டத்தை நோக்கி ஆட்டம் நகருவதால், போட்டியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்களின் இலக்கை நோக்கி பயணித்து வருகின்றனர். தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், வைல்ட் கார்டில் வந்த மஞ்சரி ஆகியோர் இறுதிப்பயணத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ராயன், ஜாக்குலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Rajinikanth: "நல்லவர்களை சோதித்தாலும் கைவிடமாட்டான்" - ரஜினிகாந்த் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முத்துக்குமரன் - ராயன் (Muthukumaran Vs Rayan Argument Bigg Boss Tamil Season 8) வாக்குவாதம்:
இந்நிலையில், ராயன் 5 பசங்க சேர்ந்து, தங்களை பலம்பொருந்திய அணி என பாவித்து, தனி ஒருவனை காலி செய்திருக்கிறீர்கள் என முத்துகுமாரனுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இந்த விசயத்திற்கு மஞ்சரியும் உடன்பட்டு தனது கருத்தை தெரிவிக்க, முத்துக்குமரன் அதற்கு மாற்று கருத்து கூறுகிறார். இதனால் ராயன் தயவு செய்து ஒப்புக்கொள்ளுங்கள் என கூற, பயந்து விளையாடும் அளவு நீ பெரிய ஆள் இல்லை என முத்துக்குமரன் புறப்படுகிறார். பின் ஆத்திரமடைந்த ராயன் நான் ஒருவனாக விளையாடுகிறேன், நீங்கள் தான் ஐவராக விளையாடுகிறீர்கள் என்று கூறிவிட, முத்துகுமாரனோ ஆல் த பெஸ்ட் என வாழ்த்துக்களை சொல்லி வருகிறார். இதனால் இன்றைய நாளில், புத்தாண்டின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டில் போர்க்களம் உண்டாக்குவது உறுதியாகியுள்ளது. அடுத்தடுத்து வரும் ப்ரோமோவில் இதுதொடர்பான வாதங்கள் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முத்துகுமாரனிடம் ராயன் வாக்குவாதம் செய்யும் காணொளி:
#Day87 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/qvEAotc0ve
— Vijay Television (@vijaytelevision) January 1, 2025