ஜனவரி 02, ஜூரிச் (World News): ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிய அரசு தடை விதித்தது. இந்த நடைமுறை 2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா (Burqa), ஹிஜாப் (Hijab) ஆடைகளை அணிவதற்கான தடை அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜனவரி 01) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. Tesla Cybertruck Explosion: டிரம்ப் ஹோட்டல் வெளியே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வெடித்து சிதறிய டெஸ்லா கார்.. எலான் மஸ்க் கூறுவது என்ன?! விபரம் உள்ளே.!
புர்கா அணிய தடை:
இதுதொடர்பாக, அந்நாட்டின் பெடரல் கவுன்சில் (Federal Council) வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் 06ஆம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் 2025 ஜனவரி 01ஆம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இது பொருந்தாது. ஆனால், மற்றபடி தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.