MS Dhoni Welcomes 2025 (Photo Credit: @htcity / @ChakriDhonii X)

ஜனவரி 01, கோவா (Sports News): இந்திய கிரிக்கெட் அணி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகளின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரரும், உலகளவில் பிரபலமான விக்கெட் கீப்பருமானவர் மகேந்திர சிங் தோனி என்ற எம்.எஸ் தோனி (MS Dhoni). 43 வயதை கடந்தாலும், தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி, கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறார். Oshane Thamas: பந்துவீச்சில் மெகா சொதப்பல்... ஒரே ஓவரில் வைட், நோ பால் என 18 ரன்களை அள்ளிக்கொடுத்த வங்கதேச கிரிக்கெட்டர்.! 

மனைவியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்:

எதிர்வரும் ஐபிஎல் 2025 (IPL 2025) தொடரில், தோனியின் வருகையை எதிர்பார்த்து அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தோனி தனது மனைவி சாக்ஷி தோனி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2025ம் ஆண்டை உலகமே வரவேற்ற நிலையில், எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்ஷி தோனியுடன் புத்தாண்டை கொண்டாடி வரவேற்றார். மனைவியுடன் நடனம், பாரம்பரிய முறைப்படி விளக்கு பட்டம் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடனமாடி புத்தாண்டை வரவேற்ற தோனி - சாக்ஷி தோனி:

விளக்கில் பட்டம் விட்டு புத்தாண்டை வரவேற்ற தம்பதி: