Khel Ratna Award | Gukesh D (Photo Credit: @ANI / @GukeshD X)

ஜனவரி 02, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசின் இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சகம் (Ministry of Youth Affairs and Sports), 2024ம் ஆண்டு சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான கேல் ரத்னா விருது (Khel Ratna Award) அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 17, 2024 அன்று குடியரசுத்தலைவர் கைகளால் கேல் ரத்னா விருது வழங்கப்படும். குடியரசுத் தலைவரின் ராஷ்ட்ரபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருது வழங்கும் நிகழ்வில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. TN Govt Announcement: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைகள் விரிவாக்கம்; முழு விபரம் இதோ.! அரசாணை வெளியீடு.! 

குகேஷ்-க்கு கேல் ரத்னா விருது:

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தலைமையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மத்திய அரசுத்துறை செயலர்கள், முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில், விளையாட்டில் சிறந்து விளங்கியதன் அடையாளமாக கேல் ரத்னா விருது வழங்கப்படும். அதன்படி, உலக செஸ் சாம்பியன் குகேஷ் (Gukesh D), ஹாக்கி பிரிவில் ஹர்மான்பிரீத் சிங் (Harmanpreet Singh), பாரா தடகள பிரிவில் பிரவீன் குமார் (Praveen Kumar), துப்பாக்கிசூடுதல் பிரிவில் மனு பர்க்கர் (Manu Bhaker) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

உலக அரங்கில் இந்தியாவை ஜொலிக்கவைத்த தங்கங்களுக்கு கேல் ரத்னா:

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டியில் மனு பார்க்கர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2 பதக்கங்களை வென்று அசத்தினார். அதேபோல, உலக செஸ் சாம்பியன்ஸ் போட்டியில், குகேஷ் வெற்றியடைந்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். பாரா ஒலிம்பிக் போட்டியில் பிரவீன் குமார், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேல் ரத்னா விருது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு: