ஜனவரி 02, சென்னை (Kitchen Tips): மதுரை மல்லிகைப் பூவுக்கு மட்டுமின்றி பல்வேறு உணவுப் பொருட்களுக்கும் பிரபலமாக திகழ்கிறது. அந்தவகையில், மல்லிப் பூ இட்லி தொடங்கி, மட்டன் சுக்கா, கறி தோசை, மட்டன் எலும்பு குழம்பு, ஜிகர்தண்டா என சாப்பிடக்கூடிய உணவு பட்டியல்கள் கூடும். அந்தளவிற்கு சுவையான உணவுகளை தரக்கூடிய நகரமாக பெருமை பெற்றது. இந்த உணவுகளின் வரிசையில் இன்றைக்கு மதுரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சௌராஷ்டிரா பன் அல்வா (Bun Halwa) எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Senai Kizhangu Poriyal Recipe: சத்தான சேனைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பன் - 2
முந்திரி - 50 கிராம்
பால் - அரை கப்
கருப்பட்டி - அரை கிலோ
நெய் - 5 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் எடுத்து வைத்துள்ள பன்னை உதிரியாக்கிக் கொள்ள வேண்டும். பின், ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் உதிர்த்து வைத்துள்ள பன்னை பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
- பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி, முந்திரியை வறுத்துக் கொள்ளவும். இதனையடுத்து அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி வறுத்து வைத்துள்ள பன் சேர்க்கவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் அரை கப் பால் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். கொஞ்சம் கட்டியானப் பதத்திற்கு வந்தவுடன் கருப்பட்டியை காய்ச்சி வடிகட்டி ஊற்றி, நன்றாக கிளற வேண்டும். இதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு 15 நிமிடங்களுக்கு நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நெய்யை முழுவதுமாக சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.
- நெய் பிரிந்து மற்றும் பாத்திரத்தில் அல்வா ஒட்டாத அளவிற்கு வந்தவுடன், அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மதுரை ஸ்பெஷல் பன் அல்வா ரெடி.