New Orleans Attack (Photo Credit: @InformedAlerts X)

ஜனவரி 02, நியூ ஆர்லியன்ஸ் (World News): அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக போர்பன் ஸ்ட்ரீட் பகுதியில் மக்கள் ஆட்டம் பட்டத்துடன் கொண்டாடி கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு டிரக் கூட்டத்திற்குள் திடீரென புகுந்ததை பார்த்த மக்கள், அங்கும் இங்கும் அலறியபடி ஓடினர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்டு காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். New York Welcomes 2025: அமெரிக்காவில் பிறந்த விடியல்.. டைம்ஸ் சதுக்கத்தில் களைகட்டிய புத்தாண்டு 2025 கொண்டாட்டம்.!

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு:

அந்த ஓட்டுநர் டெக்சஸைச் சேர்ந்த 42 வயது ஷாம்சுத்-தீன் ஜப்பார் (Shamsud-Din Jabbar) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. டிரக்கில் ஐஸ் பெட்டியில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் டிரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூ ஆர்லியன்ஸ் டிரக் தாக்குதல்: