ஜனவரி 02, ஹைதராபாத் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் முன்னணி நடிகராக அறியப்படும் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வந்தார். அரசியல் அதிரடி கொண்ட கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுத, ஷங்கர் இயக்கி இருக்கிறார். ரூ.400 கோடி செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், 3டி, ஐ-மேக்ஸ் முறையிலும் உலகளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. படத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். எஸ்.திருநாவுக்கரசு இப்படத்திற்கு மிகவும் பிரம்மாண்ட திரையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். Bigg Boss Tamil Season 8: டென்ஷன் ஆவுது இவ இப்படி பேசுற - மஞ்சரி Vs பவித்ரா வாக்குவாதம்.. வெளியான வீடியோ.!

கேம் சேஞ்சர் (Game Changer):

கேம் சேஞ்சர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10, 2025 அன்று வெளியாகிறது. அன்றைய தினம் தெலுங்கு மொழிபேசும் மக்கள் வசிக்கும் தெலுங்கானா, ஆந்திரா மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை சிறப்பிக்கப்படும். சங்கராந்தி 2025 பண்டிகையை முன்னிட்டு கேம் சேஞ்சர் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியானது. இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் இருவேடங்களில் பிரம்மாண்ட தோற்றத்துடன் நடித்துள்ளார். படத்தின் டிரைலரே மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கேம் சேஞ்சர் படத்தின் பிரம்மாண்ட ட்ரைலர்: