ஜனவரி 01, நியூயார்க் (World News): 2024ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2025ம் (New Year 2025 ஆண்டினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஓசினியா தீவுகளில் உள்ள கிரிபாட்டி நேற்று மாலை இந்திய நேரப்படி 03:30 மணிக்கு தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டம், உலகளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேஷியா, சீனா, இந்தியா, அமீரகம், இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் அடுத்தடுத்து சிறப்பிக்கப்பட்டது. Welcome 2025: புத்தாண்டை மனைவியுடன் நடனமாடி, விளக்கு ஏந்தி வரவேற்ற தோனி; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டம்:
அதனைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இன்று காலை இந்திய நேரப்படி 10:30 மணியளவில், அங்கு நள்ளிரவு 12 மணி ஆகியது. அப்போது, நியூயார்க் (New York Welcomes 2025 New Year) நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டை கொண்டாட பல்லாயிரக்கணக்கில் காத்திருந்த மக்கள், ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டத்துடன் 2025 ம் ஆண்டை வரவேற்று மகிழ்ந்தனர். இதற்காக டைம்ஸ் சதுக்கத்தில் வணவேடிக்கைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்:
Happy New Year from Times Square, New York City! 2025 🎉🥳 pic.twitter.com/FV83yjq0ej
— NewYorkCityKopp (@newyorkcitykopp) January 1, 2025