டிசம்பர், 7: முளைகட்டிய பயிருக்கு சூப்பர் புட்ஸ் (Raw Sprouted Crops) என்று ஆங்கிலத்தில் பெயர் உண்டு. இதனை சிலர் பச்சையாகவும், வேகவைத்தும் என தங்களுக்கு பிடித்த வகையில் சாப்பிட்டு வருகின்றனர். உடலுக்கு பல ஆரோக்கியத்தை தரும் முளைகட்டிய பயிறு சாப்பிடுவதால் பல நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால், எதிலும் அளவு என்பது அவசியம். அளவு இல்லாத பட்சத்தில் அது ஆபத்தாகவும் மாறும்.
இரத்த சர்க்கரையளவு: இரத்த சர்க்கரை நோய் 2ம் பிரிவை கொண்ட நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை பெரிதும் உதவும். முளைகட்டிய பயிருக்கு இரத்த சர்கரைக்கலை உடைத்து ஜீரணித்து உடலினை மேம்படுத்துகிறது.
செரிமானம்: நாம் பச்சையாக இருக்கும் முளைகட்டிய பயிறுகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட இயலும். செரிமான பிரச்சனைகளும் குணமாகும். பச்சையாக எடுத்துக்கொள்ளும் உணவில் ஆண்டி-நியூட்ரியன்ஸ் இருக்கின்றன. இது செரிமான தாதுக்களை உறிஞ்சு உடல் திறனை மேம்படுத்தும். Heart Attack – Blood Group: எந்த வகை இரத்தம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
இதய ஆரோக்கியம்: தினமும் நமது உணவுகளில் சமைக்காத முளைகட்டிய பயிறுகளை சேர்த்துக்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேற்றப்படும்.
முளைகட்டிய பயிரை பச்சையாக சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள்:
நாம் உடலுக்கு நன்மை என எடுத்துக்கொள்ளும் முளைகட்டிய பயிறுகளை அதிகளவு சாப்பிட்டால் அது செரிமானத்தை பாதித்து நச்சாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. அதனைப்போல, அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருக்கும். விதைகள் ஈரப்பதமான சூழலில் இருந்து முளைப்பதால் கிருமிகளின் இனப்பெருக்கமும் இருக்கலாம். ஆகையால் முளைகட்டிய பயிர்களை வேகவைத்து சாப்பிடுவது சாலச்சிறந்தது.