Hyderabad Shocker: காதல் விவகாரத்தில் 18 வயது சிறுவன் அடித்துக்கொலை; அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி சித்ரவதை.!
கணவரைப் பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தனியே மகனுடன் தாய் வாழ, மகனின் காதல் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நவம்பர் 11, ஹைதராபாத் (Social Viral): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அன்னோஜிகுடா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் 18 வயது சிறுவன் கரண்.
இவர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவன் கரண் அப்பகுதியை சார்ந்த சிறுமி ஒருவரை சிறுவன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினருக்கு தெரிய வரவே, அவர்கள் சிறுமியை கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும், சிறுவனை தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்று, குடுமபமாக சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். 3 Months Free Recharge Scam: 3 மாதம் இலவச ரீசார்ஜ் - உங்களின் வாட்ஸப்பிலும் தகவல் வருதா?.. மக்களே உஷார்.!
இதில் உச்சகட்ட கொடுமையாக, சிறுவனின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி போட்டு சித்ரவதை செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த சிறுவனின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இரவு 07:15 மணிமுதல் சிறுவன் தாக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 11:15 மணியளவில் சிறுவனின் தாயால் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து, கரணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்திய அரசியலமைப்பு தண்டனை சட்டப்பிரிவு 302, 342, 210B-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரைப் பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து, தனது மகனை தாயார் வளர்த்து வந்த நிலையில், மகனின் காதல் காரணமாக அவரின் சிறுவனின் உயிர் பறிபோயுள்ளதாக தாய் வேதனை பட தெரிவித்தார்.
(The above story first appeared on LatestLY on Nov 11, 2023 09:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

