நவம்பர் 11, சென்னை (Technology News): பண்டிகை காலங்கள், தேர்தல் நேரங்களை குறிவைத்து மக்களிடம் பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அரசியலைப் பொறுத்தவரையில் தற்போது 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் விறுவிறுப்புடன் மக்களை நேரில் சந்தித்து தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வரும் நிலையில், மோசடி செயலில் ஈடுபடும் கும்பல் இதனை தனக்கான சாதகமான வாய்ப்பாக பயன்படுத்தி மோசடிகளை தொடருகின்றன.
அரசியல் கட்சிகள் உங்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் மற்றும் டேட்டா போன்ற சேவையை வழங்குகிறது எனக்கூறி போலியான செய்தியை வாட்ஸ் அப்பில் உலாவவிட்டு, அதன் மூலமாக பயனரின் தனிப்பட்ட தகவல் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் ஆகியவற்றை திருடி கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. Singles Day 2023: "சிங்கிள்ஸ் தவம் அல்ல வரம்": இன்று உலக ஒற்றையர் தினம்.. சிங்கில்ஸ்களே கொண்டாடுங்கள்.!
இது தொடர்பான வாட்ஸப் பதிவு வைரலாகி வரும் நிலையில், மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபரம் அறியாமல் லிங்கை தொட்டால், நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும்.
தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு இலவச டேட்டா வசதியை கொடுக்கிறது என லிங்க் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது மோசடிக்கான ஆசை வலைவிரிப்பு செயல் ஆகும்.
அதேபோல, நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படும். யாரேனும் இவ்வாறான சூழ்நிலை எதிர்கொண்டு பணத்தை இழந்தால், பணத்தை இழந்த 24 மணி நேரத்திற்குள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், நமது பணம் மீட்டுக் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
அதேபோல, இது போன்ற லிங்குகள் உங்களின் வாட்ஸப்பில் உலாவினால், அதனை கண்டு கொள்ளாமல் விடுவது அல்லது புகார் அளிப்பது நல்லது.