Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 19, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌ மற்றும்‌ புதுவையிலும்‌ மழை பெய்துள்ளது. காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்‌தில்‌ புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 10 செ.மீ மழையும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 9 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 8 செ.மீ மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது. திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவாரூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, திண்டுக்கல், நாகப்பட்டினம், மதுரை, சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையை பொறுத்தவரையில், வடதமிழக பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது. 19.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்‌, இராணிப்பேட்டை, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களில்‌, புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

20.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தர்மபுரி, சேலம்‌, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Tiruvannamalai Deepam: திருவண்ணாமலை மகா தீப கொண்டாட்டத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை; துணை முதல்வர் உதயநிதி விளக்கம்.! 

மிககனமழை அலர்ட்:

21.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌ நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 22.10.2024 மற்றும்‌ 23.10.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அக்.24 அன்று 9 மாவட்டங்களில் மழை:

24.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌ மற்றும்‌ நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ காரைக்கால்‌ பகுதியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Weather Report Chennai):

25.10.2024: தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34” செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26” செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.10.2024 மற்றும்‌ 20.10.2024 ஆகிய தேதிகளில் அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 21.10.2024 அன்று அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும்‌ தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

19.10.2024 அன்று மத்தியகிழக்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும்‌ வடகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. 20.10.2024 அன்று மத்தியகிழக்கு அரபிக்கடல்‌, மத்தியமேற்கு அரபிக்கடலின்‌ கிழக்கு பகுதிகள்‌ மற்றும்‌ வடக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.