டிசம்பர் 02, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 46 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Pushpa 2 Pre-Release: புஷ்பா 2 படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு குவியும் ரசிகர்கள்: போக்குவரத்தை மாற்றி அமைத்த காவல்துறை.!
தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் டாஸ்க் நடந்தது. அதில் ஜெஃப்ரி வெற்றி பெற்றார். இந்நிலையில் ஒன்பதாம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் மஞ்சரி, முத்துக்குமார், சாச்சனா, ராணவ், ரஞ்சித், தர்ஷிகா, சௌந்தர்யா, ராயன், பவித்ரா, சத்யா, ஜாக்லின், ஆனந்தி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.
பிக் பாஸ் ப்ரோமோ: