டிசம்பர் 02, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு பேர்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவருடைய மகள் கீர்த்தனா (வயது 22) மருத்துவக் கல்லூரியில் (Medical College Student) 2ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்நிலையில், கீர்த்தனா விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று (டிசம்பர் 01) இரவு நேரத்தில் பரோட்டா (Parotta) சாப்பிட்டுவிட்டு உறங்கியுள்ளார். Sathanur Dam: 52 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்ளும் தென்பெண்ணையாறு; சாத்தனூர் அணை திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை.!
இந்நிலையில், இன்று (டிசம்பர் 02) காலை கீர்த்தனா நீண்ட நேரமாகியும் தூங்கி எழவில்லை. அதனால் அவருடைய பெற்றோர் சென்று பார்த்தனர். அப்போது, அவர் கீர்த்தனா மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கீர்த்தனா சாப்பிட்ட பரோட்டா காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் சாப்பிட்ட பரோட்டா எங்கு தயாரிக்கப்பட்டது ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டதா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.