Travel Advisory in Hyderabad for Pushpa 2 Pre-Release (Photo Credit: @TrendsAlluArjun / @alluarjun X)

டிசம்பர் 02, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது. Peelings Song Out Now: புஷ்பா 2 படத்தின் பீலிங்ஸ் பாடல் வெளியீடு; கேட்டு மகிழ லிங்க் உள்ளே.! 

இன்னும் 3 நாட்களில் படம் வெளியீடு:

இதனையடுத்து, படத்தின் இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிச்சென்று, 05 டிசம்பர் 2024 அன்று படம் வெளியிடுவது உறுதி செய்ய்யப்ட்டது. தெலுங்கு மொழியில் உருவான திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழியிலும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படக்குழு சார்பில் புதிய வழிகளில் முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்:

இந்நிலையில், படத்தின் வெளியீடை முன்னிட்டு, ஹைதராபாத்தில் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிமுதல் 10 மணிவரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு, ரசிகர்கள் பெருவாரியாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, படம் ப்ரீ-ரிலீஸ் செய்யப்படும் கேவிபிஆர் மைதானம் செல்லும் வழி, வரும் வழியில் போக்குரவத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புஷ்பா 2 படத்தின் ப்ரீ-ரிலீஸ் வெளியீடு நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல்துறையினர் போக்குவரத்து தொடர்பான முன்னறிவிப்பு: