IPS officer Harsh Bardhan Dies In Road Accident (Photo Credit: @HeyArjun0 X)

டிசம்பர் 02, மைசூர் (Karnataka News): மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த ஹர்ஷ் பர்தன் (வயது 26) என்பவர் கர்நாடகா கேடர் அதிகாரியாக இருந்துள்ளார். இவர், மைசூருவில் (Mysore) உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (டிசம்பர் 01) அவர் ஹாசன் பகுதிக்கு வழக்கம் போல் போலீஸ் ஜீப்பில் பணிக்கு சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக வழியில் ஜீப்பின் டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து (Accident) விபத்துக்குள்ளானது. Puducherry CM Rangasamy: புதுவையில் வரலாறு காணாத வெள்ளம்; ரேஷன் அட்டைக்கு ரூ.5000/- நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!

இதனையடுத்து, அவ்வழியே சென்றவர்கள் விபத்தில் சிக்கிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஹர்ஷ் பர்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டின் (SDM) மகன் பர்தன். இவர், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். ஐ.பி.எஸ் (IPS) படித்த அவர் மைசூரில் 4 வார படிப்பை முடித்து அடுத்த 6 மாதங்களுக்கு ஹாசனில் பயிற்சி எடுக்கவிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.